வெள்ளி, டிசம்பர் 23, 2011

மயக்கம் என்ன - தவறிய வெற்றி

செல்வா இரண்டாம் உலகம் ஆரம்பித்து கை விட்ட பின்பு குறுகிய காலத்தில்  எடுத்து இரண்டாவது தோல்வி படத்தை தந்திருக்கிறார் 
கதைப்படி ஹீரோ ஒரு போட்டோகிராபர் அவருக்கு குடும்பம் கிடையாது நண்பர்கள் உதவியில் வாழ்கிறார் நண்பனின் லவ்வரை லவ்வுகிறார் கல்யாணமும் செய்கிறார் .தனுஷ்  எடுத்த படத்தை ரவி பிரகாஷ் தன்னுடைய படம் என்று பொய் சொல்லி விருது வாங்கி விடுகிறார் அதனால் மனமுடைந்து மாடியில் இருந்து தவறி கீழே விழுகிறார் தனுஷ் 
அப்புறம் சில வருடங்களுக்கு பிறகு என்று போடுகிறார்கள் தனுஷ் சைக்கோவாக இருக்கிறார் பின் தன் காதல் மனைவியை அடிக்கிறார் உதைக்கிறார் கருவை சிதைக்கிறார் மனம் திருந்துகிறார் பெரிய்ய வைல்ட் லைப் போட்டோகிராபர் ஆகிறார் விருது வாங்கி மனைவியை இரும்பு மனுஷி என்று சொல்வதோடு படம் சுபம்

திருட்டு மூதேவி முண்டகலப்பை என்று வசனம் பேசுவதினலோ
கதாநாயகி கூப்பிட்ட உடன் டேடிங் வருவதாலோ
கூட்டி வந்தவனை விட்டுட்டு கூட இருக்கிறவன் மேல ஆசைபடுவதினாலோ
அப்பாவானவர் பிராந்தியை நீட்டி கொண்டே இருப்பதினாலோ
இது அடுத்த தலைமுறைக்கான படம் என்று ஆகிவிடாது.

வீடியோ லைட் பிடித்து போட்டோ எடுக்கும் கலையை நான் எங்குமே பார்த்ததில்லை
எதுக்குன்னா நானும் ஒரு போட்டோக்காரந்தான்
இந்த படத்தில் ஒரு தவறை எல்லாரும் சுட்டி காட்டினார்கள்
தனுஷ் எடுத்த போட்டோக்களை ரவி பிரகாஷ் ஆபீஸ்லயே போட்டுட்டு வந்துட்டாரு அப்படின்னு

ஒரிஜினல் பைல் எங்கே என்று எந்த மாங்கா மடையனும் கேட்காம அவார்ட் கொடுக்க மாட்டான் அது தனுஷ் காமெரால தான இருக்கு

பாவம் தனுஷ் அண்ணனுக்காக மாய்ந்து மாய்ந்து நடித்திருக்கிறார்
அதுவும் காட்டில் பறவையை படம் பிடிக்கும் பொது இலை காற்றில் மிதந்து வந்து  அவர் முகத்தில் விழும் போது பின்னணி இசையும் தனுஷின் பரவசமான அனுபவமும் சான்சே இல்ல, தேசிய விருதுக்கு தகுதியானவர்தான்

ரிச்சாவின் அனைத்து முக பாவங்களும் அருமை, நல்ல நடிப்பும் கூட
கிளைமாக்சில் டிவியை பார்த்தபடியே கண்ணில் நீர் வழியே உட்கார்ந்து இருக்கும் போது நம் மனதிலும் உட்கார்ந்து விடுகிறார்
நேர்த்தியான பின்னணி இசை
அருமையான படத்தொகுப்பு
கண் குளிரும் ஒளிப்பதிவு
இவை எல்லாவற்றையும் செல்வா வீணடித்து விட்டாரே என்ற ஆதங்கம் தான்

மயக்கம் என்ன -முழு படம் பார்க்காமல் சில காட்சிகளை மட்டும் சூப்பர் சீனாக காட்டினால் எத்தனை முறை வேண்டுமானாலும் பார்க்கலாம்


0 கருத்துகள்:

கருத்துரையிடுக