அழகர் சாமியின் குதிரை படம் சரியாக ஓடாத காரணத்தினால்
சுசீந்திரன் கோபத்தில் எடுத்த படம் போல
தன்னுடைய பெயரையும் கெடுத்துக்கிட்டு விக்ரம் பெயரையும் சேர்த்து கெடுத்துட்டாங்க அதாங்க வருத்தம்
சரி கதைக்கு வருவோம்
ஆரம்பத்தில் எல்லாருடைய நிலத்தையும் அக்காவோட(வில்லி) ஆட்கள் அபகரிக்கிறாங்க. கே.விஸ்வநாத் ஒரு அநாதை ஆசிரமம் நடத்துறாரு
அதையும் அபகரிக்க வில்லன் கும்பல் போராடுது நம்ம விக்ரம் வழக்கம் போல வந்து காப்பத்துதாறு அவ்வளவுதான் சுபம்
எப்படின்னு வெள்ளித்திரையில் பாருங்க
விக்ரமுக்கு இது அசால்ட்டான கேரக்டர் ப்பூ என ஊதி தள்ளுகிறார்
சண்டை பிரியர்களா நீங்கள் உங்களுக்கு சண்டைய வெறுக்கிற அளவுக்கு இதில் சண்டை இருக்கு ஒவ்வொரு சண்டையும் பதினைந்து நிமிடம் ஓடுது
விக்ரம் பில்ட் அப் நல்லா தான் இருக்கு அதை எவ்வளவு நேரம் தான் பார்த்துக்கொண்டே இருக்க முடியும்
படம் முடியும் பொது நம்ம கஜினி வில்லன் 'வாப்பா' வா வாராரு அடிவாங்குராறு செத்து போறாரு
ரீமே சென்னுக்கும் ஸ்ரேயாக்கும் முப்பது லகரம் சம்பளம் கொடுத்து ஆட வைச்சுருக்காங்க.
பாவம் அந்த பாட்டு படம் முடியும் பொது தான் போடுறாங்க
எதார்த்தமா எடுத்த படம் இப்போ நடக்கிற அரசியல் சூழக்கு ஒத்து போவதால் ஏதேனும் பிரச்சினை வந்துட போகுதோன்னு ஆரம்பத்திலேயே கற்பனைன்னு ஸ்லைடு போட்டாச்சு
கமர்சியல் படம் ஒடும்தான் ஆனால் இந்த மாதிரி படம் எடுத்துட்டு கமர்சியல் படம்னு சொன்னா நாங்க ஒத்துக்க மாட்டோம்
பணம் போடா ஆள் இருக்கு ஹீரோவும் சும்மா தான இருக்காரு என்னதயாது எடுப்போமே என்று எடுத்த மாதிரி இருக்கிறது
ரசிகனின் ரசனையை இவ்வளவு மட்டமா எடை போட்டு இருக்கிறார் இயக்குனர்
அப்புறம் இன்னொரு முக்கியமான விஷயம் ஹீரோயினின் கதாபத்திரத்தின் பெயர் எந்த இடத்திலும் குறிப்பிடப்படவில்லை எதுக்குன்னா யாருமே ஹீரோயினை பெயர் சொல்லியே கூப்பிடல
மூளையை ஒரு ஓரமா கலட்டி வைத்துட்டு பார்க்க ஏற்ற படம்
மொத்தத்திலே இது ஒரு பொய் படம் , விக்ரம் நடித்த படங்களின் பட்டியலில் ஒரு படம் கூடுதலாக சேர்ந்துள்ளது அவ்வளவே
0 கருத்துகள்:
கருத்துரையிடுக