புதன், டிசம்பர் 28, 2011

கோடீஸ்வரர் நிகழ்ச்சியும், அம்பானியின் கோமனத்தை உருவும் தந்திரமும்.........



கோடீஸ்வரர் நிகழ்ச்சியும், அம்பானியின் கோமனத்தை உருவும் தந்திரமும்.........ஆம் இந்த நீங்களும் வெல்லலாம் ஒரு கோடி நிகழ்ச்சியில் பன்னும் தகிடுதனம் பற்றிய முழு அவேர்னஸ் ஆர்டிக்கள்... விஜய் டீவி நிகழ்ச்சியில் அம்பானி என்கிருந்து வந்தார்னு கேக்குறிங்களா, இந்த நிகழ்ச்சியில் ஒரிஜினல் தயாரிப்பாளர் அம்பானியின் கம்பெனி "பிக் சினர்ஜி" எனும் நிறுவனம் தான்.

ஏற்கனவே ஸ்டார் நிறுவனத்தின் தலைவர் பன்னிய ஃப்ராடுதனத்தால் அதன் பிரிட்டிஷ் நிறுவன சி ஈ ஓ சிறைக்கு இரண்டு மாதத்திர்க்கு முன் தான் சென்றார். இப்பொழுது இவர்கள் அம்பானி கம்பெனியுடன் சேர்ந்து நடத்தும் பகல் கொள்ளை தான் " நீங்களும் வெல்லலாம் ஒரு கோடி" நிகழ்ச்சி.....

முதலில் இவர்கள் கேட்கும் கேனைத்தனமான கேள்விகளுக்கு நீங்கள் குறுஞ்செய்தி அனுப்பவேண்டும் அதை அனுப்ப ரூபாய் 3 முதல் ஐந்து வரை வசூலிக்கப்படுகிறது அது போக அவர்களை தொடர்புகொள்ள சில ஸ்பெஸல் நம்பர்கள் உள்ளன இது ஒரு நிமிடத்திற்க்கு ரூபாய் 6.99 வரை சார்ஜ் செய்யபடுகிறது.... இவர்கள் தினமும் 30 - 35 கோடி வரை இந்த குறுஞ்செய்தி மற்றூம் டெலிபோன் காலில் சம்பாதிகின்றனர். அதாவ்து பப்ளிக் டெலிபோனிலிருந்து நீங்கள் போன் செய்தால் அது செல்லாதாம், ஆபிஸில் இருந்து போன் செய்தாலும் செல்லாதாம், வீட்டில் மட்டும் இருந்துதான் போன செய்யவேண்டுமாம் அப்பதான் உங்கள் டெலிபோன் பில்லில் இந்த கொள்ளை சார்ஜ் வரும் நீங்களும் பணம் கட்ட வேண்டும்.... இது ஒரு லாட்டரி பிஸினஸை விட மிக பெரிய கொள்ளை ஆம் 35 கோடி இதன் மூலம் வருமானம் மற்றும் விளம்பரம் எல்லாம் சேர்த்து ஒரு நாளைக்கு 40 கோடிக்கு மெல் வருமானம், இதை நம் தமிழ் ஹீரொ வக்காலத்து வாங்கும் காரணம் அவருக்கு டெய்லி ஒரு கோடி ரூபாய் அதனால் நம்ம மக்கள் முட்டாள் ஆனால் அவருக்கென்ன கவலை தமிழனுக்கு இந்த படம் பார்த்தால் திமிறு வரும்னு சொல்லி மிளகாய் அரைச்சாச்சு இப்ப இந்த குறுஞ்செய்தி, ஸ்பெஸல் நம்பர் டெலிபோன் கால் மூலம் தினமும் கொள்ளை, இதில் குளிர்காய்பவர்கள் அன்றாடம் காய்ச்சிகள் இல்லை அம்பானியும், முட்ராக்கும், சூர்யாவும்தான்.

இந்த 37 பக்க கேமின் டெர்ம்ஸ் அன்ட் கன்டிஷன்ஸ் (Terms & Conditions)
www.asknagravi.com/orukodi படியுங்கள் அப்புறம் நீங்கள் முடிவு செய்யுங்கள், இல்லை நான் என் காசை கரியாக்கியே தீருவேன் என்று கங்கனம் கட்டி கொண்டு குறுஞ்செய்தி அல்லது கால் பண்ணினால் "ஒன்னும் செய்யமுடியாது". உண்மையிலே அறிவு சார்ந்த நிகழ்ச்சியாக இருந்தால் எதற்க்கு இந்த ஸ்பெஸல் நம்பர் டோல்ஃப்ரீ நம்பர் அல்லவா கொடுக்க வேனும்..... தயவு செய்து வீட்டில் இருக்கும் டெலிபோனை பூட்டி வையுங்கள், குழந்தைகளுக்கு எடுத்து சொல்லுங்கள் போன் பண்னவேண்டாம் என்று மொபைல்களை தெரியாதவர்களிடம் கொடுக்க வேண்டாம்....  தயவு செய்து எவ்வளவு முடியுமோ அவ்வளவு பகிருங்கள் மக்களுக்கு உண்மைகளை எடுத்து சொல்லுங்கள்

author - நாகராஜன் ரவி

வெள்ளி, டிசம்பர் 23, 2011

மயக்கம் என்ன - தவறிய வெற்றி

செல்வா இரண்டாம் உலகம் ஆரம்பித்து கை விட்ட பின்பு குறுகிய காலத்தில்  எடுத்து இரண்டாவது தோல்வி படத்தை தந்திருக்கிறார் 
கதைப்படி ஹீரோ ஒரு போட்டோகிராபர் அவருக்கு குடும்பம் கிடையாது நண்பர்கள் உதவியில் வாழ்கிறார் நண்பனின் லவ்வரை லவ்வுகிறார் கல்யாணமும் செய்கிறார் .தனுஷ்  எடுத்த படத்தை ரவி பிரகாஷ் தன்னுடைய படம் என்று பொய் சொல்லி விருது வாங்கி விடுகிறார் அதனால் மனமுடைந்து மாடியில் இருந்து தவறி கீழே விழுகிறார் தனுஷ் 
அப்புறம் சில வருடங்களுக்கு பிறகு என்று போடுகிறார்கள் தனுஷ் சைக்கோவாக இருக்கிறார் பின் தன் காதல் மனைவியை அடிக்கிறார் உதைக்கிறார் கருவை சிதைக்கிறார் மனம் திருந்துகிறார் பெரிய்ய வைல்ட் லைப் போட்டோகிராபர் ஆகிறார் விருது வாங்கி மனைவியை இரும்பு மனுஷி என்று சொல்வதோடு படம் சுபம்

திருட்டு மூதேவி முண்டகலப்பை என்று வசனம் பேசுவதினலோ
கதாநாயகி கூப்பிட்ட உடன் டேடிங் வருவதாலோ
கூட்டி வந்தவனை விட்டுட்டு கூட இருக்கிறவன் மேல ஆசைபடுவதினாலோ
அப்பாவானவர் பிராந்தியை நீட்டி கொண்டே இருப்பதினாலோ
இது அடுத்த தலைமுறைக்கான படம் என்று ஆகிவிடாது.

வீடியோ லைட் பிடித்து போட்டோ எடுக்கும் கலையை நான் எங்குமே பார்த்ததில்லை
எதுக்குன்னா நானும் ஒரு போட்டோக்காரந்தான்
இந்த படத்தில் ஒரு தவறை எல்லாரும் சுட்டி காட்டினார்கள்
தனுஷ் எடுத்த போட்டோக்களை ரவி பிரகாஷ் ஆபீஸ்லயே போட்டுட்டு வந்துட்டாரு அப்படின்னு

ஒரிஜினல் பைல் எங்கே என்று எந்த மாங்கா மடையனும் கேட்காம அவார்ட் கொடுக்க மாட்டான் அது தனுஷ் காமெரால தான இருக்கு

பாவம் தனுஷ் அண்ணனுக்காக மாய்ந்து மாய்ந்து நடித்திருக்கிறார்
அதுவும் காட்டில் பறவையை படம் பிடிக்கும் பொது இலை காற்றில் மிதந்து வந்து  அவர் முகத்தில் விழும் போது பின்னணி இசையும் தனுஷின் பரவசமான அனுபவமும் சான்சே இல்ல, தேசிய விருதுக்கு தகுதியானவர்தான்

ரிச்சாவின் அனைத்து முக பாவங்களும் அருமை, நல்ல நடிப்பும் கூட
கிளைமாக்சில் டிவியை பார்த்தபடியே கண்ணில் நீர் வழியே உட்கார்ந்து இருக்கும் போது நம் மனதிலும் உட்கார்ந்து விடுகிறார்
நேர்த்தியான பின்னணி இசை
அருமையான படத்தொகுப்பு
கண் குளிரும் ஒளிப்பதிவு
இவை எல்லாவற்றையும் செல்வா வீணடித்து விட்டாரே என்ற ஆதங்கம் தான்

மயக்கம் என்ன -முழு படம் பார்க்காமல் சில காட்சிகளை மட்டும் சூப்பர் சீனாக காட்டினால் எத்தனை முறை வேண்டுமானாலும் பார்க்கலாம்


ராஜபாட்டை - மெகா ஓட்டை,விமர்சனம்







அழகர் சாமியின் குதிரை படம் சரியாக ஓடாத காரணத்தினால் 
சுசீந்திரன் கோபத்தில் எடுத்த படம் போல 

தன்னுடைய பெயரையும் கெடுத்துக்கிட்டு விக்ரம் பெயரையும் சேர்த்து கெடுத்துட்டாங்க அதாங்க வருத்தம் 


சரி கதைக்கு வருவோம் 

ஆரம்பத்தில் எல்லாருடைய நிலத்தையும் அக்காவோட(வில்லி) ஆட்கள் அபகரிக்கிறாங்க. கே.விஸ்வநாத் ஒரு அநாதை ஆசிரமம் நடத்துறாரு 
அதையும் அபகரிக்க வில்லன் கும்பல் போராடுது நம்ம விக்ரம் வழக்கம் போல வந்து காப்பத்துதாறு அவ்வளவுதான் சுபம் 
எப்படின்னு வெள்ளித்திரையில் பாருங்க 


விக்ரமுக்கு இது அசால்ட்டான கேரக்டர் ப்பூ என ஊதி தள்ளுகிறார் 
சண்டை பிரியர்களா நீங்கள் உங்களுக்கு சண்டைய வெறுக்கிற அளவுக்கு இதில் சண்டை இருக்கு ஒவ்வொரு சண்டையும் பதினைந்து  நிமிடம்  ஓடுது 
விக்ரம் பில்ட் அப் நல்லா தான் இருக்கு அதை  எவ்வளவு நேரம் தான் பார்த்துக்கொண்டே இருக்க முடியும் 
படம் முடியும் பொது நம்ம கஜினி வில்லன் 'வாப்பா' வா வாராரு அடிவாங்குராறு செத்து போறாரு 
ரீமே சென்னுக்கும் ஸ்ரேயாக்கும் முப்பது லகரம் சம்பளம் கொடுத்து ஆட வைச்சுருக்காங்க. 
பாவம் அந்த பாட்டு படம் முடியும் பொது தான் போடுறாங்க 


எதார்த்தமா எடுத்த படம் இப்போ நடக்கிற அரசியல் சூழக்கு ஒத்து போவதால் ஏதேனும் பிரச்சினை வந்துட போகுதோன்னு ஆரம்பத்திலேயே கற்பனைன்னு ஸ்லைடு போட்டாச்சு 


கமர்சியல் படம் ஒடும்தான் ஆனால் இந்த மாதிரி படம் எடுத்துட்டு கமர்சியல் படம்னு சொன்னா நாங்க ஒத்துக்க மாட்டோம்
பணம் போடா ஆள் இருக்கு  ஹீரோவும் சும்மா தான இருக்காரு என்னதயாது எடுப்போமே என்று எடுத்த மாதிரி இருக்கிறது 
ரசிகனின் ரசனையை இவ்வளவு மட்டமா எடை போட்டு இருக்கிறார் இயக்குனர் 


அப்புறம் இன்னொரு முக்கியமான விஷயம்  ஹீரோயினின் கதாபத்திரத்தின் பெயர் எந்த இடத்திலும் குறிப்பிடப்படவில்லை எதுக்குன்னா யாருமே ஹீரோயினை பெயர் சொல்லியே கூப்பிடல 


மூளையை ஒரு ஓரமா கலட்டி வைத்துட்டு பார்க்க ஏற்ற படம் 
மொத்தத்திலே இது ஒரு பொய் படம் , விக்ரம் நடித்த படங்களின் பட்டியலில் ஒரு படம் கூடுதலாக சேர்ந்துள்ளது அவ்வளவே 



செவ்வாய், டிசம்பர் 20, 2011

அனைவருக்கும் எனது வணக்கங்கள் 
எப்பொழுதும் எழுத ஆசை
எப்போதாவது எழுதவே காலம் அனுமதிக்கிறது (புத்தியும் கூட)