திங்கள், ஏப்ரல் 02, 2012

3 விமர்சனம்


நம்ம ஊர் ஆளுங்க எதுக்கு ஒரு படத்துக்கு இடைவேளை விடறாங்க பேசாம முதல் பாதியிலேயே படத்தை முடித்து இருந்தால் அந்த படம் பெரியதாக பேசப்படுமோ என்ற என் சந்தேகத்தை வலுவாக்க வந்திருக்கும் இன்னொரு படம் மூணு (3)


தனுஷ், ஸ்ருதி நடிக்க ஐஸ்வர்யா தனுஷ் இயக்க அனிருத் இசையமைப்பில் வந்திருக்கும் படம் மூணு

இந்த படத்தோட முதல் பாதியை பற்றி மட்டுமே நான் சொல்ல போறேன்
இரண்டாவது பாதியை தயவு செய்து யாரும் பார்க்காமல் எழுந்து வந்து விட்டீர்கள் என்றால் இந்த படம் உங்கள் மனதிற்கு மிக நெருக்கமான படமாக அமையும்


தனுஷ் பற்றி சொல்லவே வேண்டாம் தேசிய விருதுக்கு தான் தகுதியானவன் என்று மீண்டும் நிரூபிக்கிறார் மீசை எடுத்து விட்டால் ஸ்கூல் பையன் போலவே தோற்றமளிப்பது அவருடைய ப்ளஸ்

சிவகார்த்திகேயன், அவருடைய எள்ளல்களுக்கு தியேட்டரில் ஏகப்பட்ட கைதட்டல்கள் தனுஷும் இவரும் சேர்ந்து வரும் காட்சிகளில் இருக்கும் டைமிங் காமெடி தூள் பரத்துகிறது
தனுஷ் முத்தம் கொடுத்துட்டு ஓடி போயிட்டா என்று சொல்லும் போதும் எந்த ரியாக்ஷனும் இல்லாமல் யார் கூட என்று கேட்கும் போது அடுத்த சந்தானமாக வருவதற்கு வாய்ப்புகள் இருப்பதாக தோன்றுகிறது


ஸ்ருதிக்கும் சூர்யாவுக்கும் எடுபடாத chemistry தனுஷுடன் எப்படி சாத்தியம் என்று தெரியவில்லை (ஐஸ்வர்யா தனுஷ் கவனிக்க)
அவ்வளவு காதல் இருவரின் முகத்திலும் அதிலும் அந்த மொட்டை மாடி காட்சி, ஒரு நிமிடம் ஒரு நிமிடம் என்று தனுஷ் சொல்லும் போது போகணும் என்று சொல்வதிலாகட்டும். தனுஷ் போ என்று சொன்ன பிறகு வரும்
அந்த காதல் - அழகு.


ஸ்ருதி சைக்கிளை பள்ளத்தில் விட்டு ஓட்டும் போது முகத்தை மட்டும் பார்ப்பவன் யோக்கியன் எனப்படுவான்


ஐஸ்வர்யா தனுஷ், கண்டிப்பா பாராட்டியே ஆக வேண்டும் தன கணவனுடன் இன்னொரு பெண்ணை இவ்வளவு நெருக்கமாக நடிக்க வைத்ததற்கு
முதல் பாதியில் சொந்த கற்பனையுடன் இறங்கி பதின்ம வயதுகளின் ஏக்கங்களை அழகாக பதிவு செய்த விதத்தில் கவனிக்க வைக்கிறார்
இரண்டாம் பாதியில் மூத்தாரிடம் வாங்கிய அறிவுரையால் அவர் படம் போலவே ஆனது ஏமாற்றமே
கண்டிப்பாக ஐஸ்வர்யாவால் ஒரு சிறந்த படத்தை தர முடியும் என்பதற்கு இந்த படம் ஒரு வெள்ளோட்டம்


அனிருத். யார்யா இந்த பையன் பின்னணி இசை எல்லாம் பக்காவா இருக்கு
அதிலும் அந்த கண்ணழகா பாடலில் வரும் புல்லாங்குழலை பின்னணியாக தனுஷ் ஸ்ருதி காட்சிகளுக்கு பயன்படுத்தி இருப்பது அருமை 








கண்டிப்பாக இவருக்கு பெரிய எதிர்காலம் இருக்கு
கொலைவெறி பாட்டு பார்க்காமலே இருந்திருக்கலாம்,ஹேண்டி கேம்ல எடுத்த வீடியோவே நல்லா இருந்தது அந்த பாடலுக்கு கிடைத்த பெயர் அப்படியே பாழாகி போனது வருத்தம்


படத்தில் தனுஷ் ஸ்ருதிக்கும் திருமணம் முடிந்த கையேடு சுபம் போட்டதாக நினைத்து கொண்டு அனைவரும் வந்து விடவும்